Smriti Irani Returns To Serial: மீண்டும் சீரியலில் நடிக்க வரும் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி! வைரலாகும் முதல் லுக்...
"Kyunki Saas Bhi Kabhi Bahu Thi" என்ற ஹிந்தி சீரியல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திரும்பும் செய்தி வெளியானதிலிருந்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது ஒரு தொலைக்காட்சி வரலாற்றின் ஒரு புரட்சி என்பதோடு, பல தலைமுறைகள் ரசித்த எக்தா கபூர் உருவாக்கிய சீரியலாகும்.
ஸ்மிரிதி இராணி அரசியலில் முன்னால் அமைச்சராக இருந்த நிலையில், "Kyunki Saas Bhi Kabhi Bahu Thi" சீரியலில் இவர் துலசி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது ஒரு லீக் ஆன புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஸ்மிரிதி இராணி, துலசி வீரானியாக மீண்டும் வருவது போன்ற தோற்றத்தில் காட்சியளித்தார். இது, பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வர்ற மாதிரி தான் இருந்தது என்று ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
2000 முதல் 2008 வரை, ஸ்மிரிதி தான் ஹிந்தி சீரியல்களின் ராணி! இதனைத் தொடர்ந்து, 2000-இல் தான் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற சீரியல் Trend-இல் இருந்த நிலையில், அந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பு திறனை வைத்து மக்கள் மனதில், ஆழ்ந்த இடம் பெற்றார். 5 வருடங்கள் தொடர்ந்து சிறந்த நடிகை விருது, அதிகமான சம்பளம் பெற்ற நடிகை என பல சாதனைகள் உள்ளன.
ஸ்மிரிதி அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது இனையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதனை ரசிகர்கள் பார்த்தவுடன், “எனக்கு எங்க குழந்தைப் பருவம் திரும்பி வந்த மாதிரி இருக்கு” என்று பதிவிட்டனர். மேலும், “துலசி அப்படியேதான் இருக்காங்க! அழகு overloaded!” எனவும் மக்கள் எழுதினர்.
“துலசி & மிஹிர” ஆகிய ஜோடிக்கு இன்னும் ரசிகர்கள் உள்ளது. இந்த ரீபூட் நாம் TV முன்னால் குடும்பமோடு கூடி பார்த்த அந்த காலங்களை மீண்டும் வாழ வைக்கப் போகிறது என்று மக்களின் எதிர்பார்பாக உள்ளது.
"Kyunki 2.0"ன் அதிகாரப்பூர்வ டீசர் வரவிருப்பதை பெரும் எதிர்பார்ப்பாகக் கொண்டாடும் ரசிகர்கள், அந்த டீசருக்காகவே இப்போது காத்திருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் தெரிவிக்கின்றன. மக்கள் அனைவரும் "Kyunki"யின் பாகம் 2 குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.